பரிசுக்குள் வாகனம் செலுத்துவதில் புதிய நடைமுறைகள்

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசுக்குள் வாகனம் செலுத்துவதில் புதிய நடைமுறைகள்

பரிசுக்குள், வரும் ஜனவரி 16 ஆம் திகதி முதல், வாகனங்களுக்கான கட்டுபாடுகள் விதிக்கப்பட உள்ளன. வார நாட்களில் சில வாகனங்கள் கட்டாய தடையைச் சந்திக்க உள்ளன. 
 
பரிசுக்குள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசடைவைத் தடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு அளவு ஸ்டிக்கர்களும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன. வாகங்கள் வெளியிடும் புகை மற்றும் வெப்பம் ஆகியவற்றை கணித்து, அதற்கான அளவீடுகளில் உள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டியிருப்பது வரும் ஜனவரி 16 முதல் அவசியமாகிறது. அந்த அளவுகளை பொறுத்தே பரிசுக்குள் வாகனங்களை செலுத்தும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்க ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று பரிசுக்குள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தெரிவிக்கையில், ஒரு சிலரே வாகங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்ததாக தெரிவித்தார்கள். தாம் பதிவு செய்துள்ளதாகவும், இதுவரை தங்களுக்கான ஸ்டிக்கர்கள் வழங்கப்படவில்லை எனவும் சாரதிகள் குறிப்பிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். 1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் முற்றாக தடை செய்யப்பட்டும், அதன் பின்னராக வாகங்களுக்கு 6 வகை அளவீடுகளில் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாத வாகனங்கள் வரும் 16 ஆம் திகதி முதல், வார நாட்களில் காலை 8 மணியில் இருந்து மாலை 8 மணிவரை பரிசுக்குள் பிரவேசிப்பதை முற்றாக தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை