பரிஸ் - இன்று காலை வங்கியில் - 20000 யூரோக்கள் கொள்ளை!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  இன்று காலை வங்கியில்  20000 யூரோக்கள் கொள்ளை!

இன்று பரிசின் 19 ஆம் வட்டாரத்தில் வங்கி ஒன்றில் வைத்து 20,000 யூரோக்கள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று செவ்வாய்க்கிழமை காலை, பரிசின் 19 ஆம் வட்டாரத்தின் Jean-Jaurès Avenue யில் உள்ள ஒரு வங்கி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வங்கியில் பண வைப்புச் செய்ய வந்த நபர் ஒருவரிடம் இருந்து கொள்ளையன் ஒருவர் 20,000 யூரோக்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளான். நபர் ஒருவர் காலை 10.10 மணி அளவில் 20,000 யூரோக்கள் பணத்துடன் வங்கிக்குள் நுழைந்துள்ளார். வங்கியில் பணம் வைப்பிடும் சீட்டை நிரப்பிக்கொண்டிருக்கும் போது கொள்ளையன் பணத்தை திருடியுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொள்ளையன் வெளியில் காத்திருந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
19 ஆம் வட்டார காவல்துறையினரால் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூலக்கதை