எரிவாயு கட்டணம் குறைகிறது!

PARIS TAMIL  PARIS TAMIL
எரிவாயு கட்டணம் குறைகிறது!

தொடர்ச்சியான விலையேற்றங்களுக்கு பின்னர் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி என தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் எரிவாயு கட்டணம் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் பெப்ரவரி 1ம் திகதி எரிவாயு கட்டணம் குறைக்கப்பட உள்ளது. ஆனால் மிக குறைந்த அளவு கட்டணமே குறைக்கப்பட உள்ளது. கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து படிப்படியாக எரிவாயு கட்டணம் அதிகரிக்கப்பட்டு, ஜனவரி 2015 இல் இருந்து ஜனவரி 2016 வரையான காலத்தில் சராசரியாக 5% வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து வரும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் 0.6 வீதம் எனும் சொற்ப வீதத்தால் கட்டணம் குறைக்கப்பட உள்ளது. 
 
EDF, Direct Energie, Eni, Lampiris போன்ற எரிவாயு வழங்குனர்கள் மூலம், பிரான்சுக்குள் 10.6 மில்லியன் வீடுகளுக்கு எரிவாயு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை