வெள்ளை மாளிகை ஆலோசகராக டிரம்ப் மருமகன் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெள்ளை மாளிகை ஆலோசகராக டிரம்ப் மருமகன் நியமனம்

வாஷிங்டன் - அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை ஆலோசகராக தனது மருமகனை நியமித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.

வருகிற 20ம் தேதியன்று நடைபெறும் பிரமாண்ட விழாவில், புதிய அதிபராக அவர் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தனது அமைச்சரவையில் இடம்பெறவிருப்பவர்கள், முக்கிய பதவிகளுக்கான அதிகாரிகள் உள்ளிட்டோரை தேர்வு செய்யும் பணியில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். தற்போது, தன்னுடைய மருமகன் ஜரேத் குஷ்னெரை வெள்ளை மாளிகையின் சீனியர் ஆலோசகராக நியமித்துள்ளார்.

இந்த பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெளியுறவு கொள்கைகள், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கும் பணி என்பதால், அதிகாரம் படைத்ததாகும். டிரம்ப் மகள் இவான்காவின் கணவரான ஜரேத் குஷ்னர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார்.

வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதால், இவர் தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

‘‘எனது கொள்கைகளை நிறைவேற்றும் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கியமான நபர் குஷ்னர்’’ என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை