பரிஸ் - தரிப்பிட கட்டணம்! - மூன்று மடங்காக அதிகரிக்கும் குற்றப்பணம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  தரிப்பிட கட்டணம்!  மூன்று மடங்காக அதிகரிக்கும் குற்றப்பணம்!!

வாகன தரிப்பிட கட்டணங்களில் பல மோசடி ஏற்படுவதால் அதற்கான குற்றப்பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பரிஸ் நகர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவர் 1, 2018 ஆம் ஆண்டில் இருந்து பரிசுக்குள் வாகன தரிப்பிட தண்டப்பணங்கள் இரண்டு மற்றும் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகர முதல்வர், 'வாகன தரிப்பிடங்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகவும், அதை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் வட்டாரத்தில் இருந்து 11 ஆம் வட்டாரம் வரைக்குமான தண்டப்பணம் 50 யூரோக்களாலும், 12 ஆம் வட்டாரத்தில் இருந்து 20 ஆம் வட்டாரம் வரைக்கும் 35 யூரோக்களாலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தண்டப்பணமானது 17 யூரோக்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பரிசுக்குள் உள்ள 150,000 தரிப்பிடங்களில் 90 வீதமான தரிப்பிடங்களில் மோசடிகள் இடம்பெறுகின்றன. இதனால் வருடத்துக்கு 300 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலண்டன், பர்சலோனா ஆகிய நகரங்களுடன் ஒப்பிடும் போது, பரிசுக்குள் தரிப்பிட கட்டணங்கள் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை