தாயகம் நோக்கிய பயணத்தில் பிரான்சின் யூதர்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தாயகம் நோக்கிய பயணத்தில் பிரான்சின் யூதர்கள்!!

2016ஆம் ஆண்டில் மட்டும் பிரான்சின் யூதர்கள் 5.000 பேர், இஸ்ரேலிற்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துள்ளனர். பிரான்சின் யூத அமைப்பு இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு யூதர்களின் தேசமான இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரிய யூத சமூகம் பிரான்சில் வசித்து வந்துள்ளது.
 
'மேல் நொக்கிச் செல்லுதல்' அல்லது 'தாயகம் நோக்கிச் செல்லுதல்' என்ற பொருளுடைய ஹிப்ரூ வார்த்தையான, «aliyah» இனைத் தாரமக மந்திரமாகக் கொண்டு, பிரான்சிலிருந்து யூதமக்கள் வெளியேறி வருகின்றனர். பிரான்சில் யூத மக்களிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், இது மிகவும் வேகமாக நடக்கத் தொடங்கி உள்ளது.
 
 
2015 இல் இப்பர் கஷேர் மீதான தாக்குதல் யூதர்களின் வெளியெற்றத்தினை அதிகப்படுத்தி, கடந்த இரண்டு வருடங்களிற்குள் அன்றாடம் யூதமக்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
 
 
 
2006 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 40.000 பிரெஞ்சு யூதர்கள் இஸ்ரேலிற்குக் குடிபெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டில், யூத எதிர்ப்புக் காட்டுமிராண்டிக் குழுவினால், இலான் ஹலிமி என்ற இளம் யூத இளைஞன் கொல்லபப்ட்டதைத் தொடர்ந்து, இந்த வெளியேற்றம் நடந்துள்ளது. பிரான்சில் மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான, பிரெஞ்சு யூதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை