அமெரிக்க நடிகையிடம் கொள்ளை! - 17 பேர் இன்று அதிரடி கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்க நடிகையிடம் கொள்ளை!  17 பேர் இன்று அதிரடி கைது!!

அமெரிக்க தொலைக்காட்சி நடிகை வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 17 நபர்கள் இன்று அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான Kim Kardashian வீட்டில் பல மில்லியன் பெறுமதியுள்ள நகைகள் கடந்த ஒக்டோபர் மாதம் கொள்ளையிடப்பட்டிருந்தது. பின்னர் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியான் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். அதை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை, கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 நபர்களை, பரிசின் பல்வேறு பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 23 வயதில் இருந்து 73 வயது வரையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒக்டோபர் 3ஆம் திகதி Kim Kardashian தங்கியிருந்த வீட்டுக்குள், காவலாளியை தாக்கிவிட்டு உள் நுழைந்த சிலர், Kim Kardashian ஐ, குளியலறைக்குள் தள்ளி நகைகள், தொலைபேசிகள் போன்றவற்றை திருடிச்சென்றிருந்தனர். பின்னர் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து, சில DNA சோதனைகளை மேற்கொண்டு, திருடர்களை பின் தொடர்ந்தனர். அக்கம் பக்கத்தினர் அனைவரது கண்காணிப்பு கமராக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு, குற்றவாளிகளை இனம் கண்டு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்ட 17 பேரிடமும் விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை