பிரெஞ்சு திரைப்படத்துக்கு - சர்வதேச கோல்டன் க்ளோப் இரட்டை விருது!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெஞ்சு திரைப்படத்துக்கு  சர்வதேச கோல்டன் க்ளோப் இரட்டை விருது!

பிரெஞ்சு நடிகை Isabelle Huppertக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அங்கீகாரமான கோல்டன் க்ளோப் விருது கிடைத்துள்ளது. 
 
இயக்குனர் Paul Verhoeven இயக்கத்தில் தயாரான "Elle" திரைப்படம், சர்வதேச சினிமா அங்கீகாரம்  கோல்டன் க்ளோப் விருதை பெற்றுள்ளது. சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை என மொத்தம் இரண்டு விருதுகள் பெற்றுள்ளது. கடந்த வருடம் மே, 21ஆம் திகதி இடம்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், பின்னர் 25 ஆம் திகதி பிரான்ஸ் முழுவதும் திரையிடப்பட்டது. 130 நிமிடங்கள் ஓடக்கூட இத்திரைப்படம் பிரெஞ்சு, ஜெர்மன், பெல்ஜிய கூட்டுத்தயாரிப்பாகும். பிரெஞ்சு மொழியில் தயாரான இத்திரைப்படம் கடந்த மாதம் கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
 
விருது பெற்றுக்கொண்ட இயக்குனர் Paul Verhoeven, 'மிக சந்தோசமாக இருக்கிறது. இத்திரைப்படம் சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடியது. மக்கள் என்மேல் கோபத்தில் இருக்கலாம்!' என தெரிவித்தார். சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக்கொண்ட Isabelle Huppert தெரிவிக்கும் போது, 'இந்த அரங்கில் அனைத்து நாட்டவர்களும் இருக்கின்றார்கள். சினிமாவில் எல்லைகளையும் சுவர்களையும் எதிர்பார்க்காதீர்கள்!' என குறிப்பிட்டார். மேலும் 'சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம்' விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர், அவ்விருதை நடிகை Isabelle Huppertக்கு சமர்ப்பித்தார். மேலும், அவருக்கு தற்போது 63 வயது ஆகிறது குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை