இளைஞனை கொன்ற வழக்கு - காவல்துறை அதிகாரி கைது!

PARIS TAMIL  PARIS TAMIL
இளைஞனை கொன்ற வழக்கு  காவல்துறை அதிகாரி கைது!

இளைஞன் ஒருவனை மகிழுந்து ஒன்றினால் இடித்து கொன்ற வழக்கில், காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்போது விசாரணைகளுக்காக Elancourt காவல்நிலையத்தில் சிறைவைக்கபட்டுள்ளார்.
 
கடந்த சனிக்கிழமை அதிகாலை Yvelines மாவட்டத்தில் இளைஞன் ஒருவனை மதுபோதையில் வாகனம் செலுத்திய அதிகாரி ஒருவர் மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். இதுதொடர்பான செய்திகளை முன்னர் தந்திருந்தோம். பின்னர் முதல்கட்ட விசாரணைகளின் முடிவில், குறித்த காவல்துறை அதிகாரியை தேடிவந்துள்ளார்கள். சம்பவம் இடம்பெறும் போது காவல்துறை அதிகாரி கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சனிக்கிழமை Louveciennes பகுதியில் உள்ள N186 சாலையில், ஒரு இரவு விடுதிக்கு அருகில் வைத்து, குறித்த 42 வயதுடைய  அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்போது விசாரணைகளை Elancourt காவல்நிலையத்தில் வைத்து மேற்கொண்டு வருகிறார்கள். 
 
விபத்து தொடர்பாக தெரியவந்துள்ளதாவது, சம்பவ தினத்தன்று (சனிக்கிழமை அதிகாலை) குறித்த இளைஞன் தன் நண்பர்களுடன் மகிழுந்து ஒன்றில் N186 சாலையில் சென்றுகொண்டிருந்துள்ளார்கள். திடீரென மகிழுந்து கட்டுபாட்டை இழந்துள்ளது. இதனால் மகிழுந்தை சிறிய எல்லை கட்டையில் இடித்து நிறுத்தியுள்ளார். பின்னர் மகிழுந்தில் ஏற்பட்ட சேதங்களை பார்ப்பதற்காக மகிழுந்தை விட்டு இறங்கியுள்ளார். அப்போது மிக வேகமாக வந்த மகிழுந்து குறித்த இளைஞனை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
 
கைதுசெய்யப்பட்ட அதிகாரி விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட இருக்கிறார்.

மூலக்கதை