2016 இல் பிரான்சில் தடுக்கப்பட்ட 24.000 தாக்குதல்கள் - பாதுகாப்பு அமைச்சர்!

PARIS TAMIL  PARIS TAMIL
2016 இல் பிரான்சில் தடுக்கப்பட்ட 24.000 தாக்குதல்கள்  பாதுகாப்பு அமைச்சர்!

2016 ஆம் ஆண்டில் பிரான்ஸ் மீது மேற்கொள்ளப்பட்ட 24.000 இணைய வழித் தாக்குதல்கள் (சைபர் தாக்குதல்கள் - cyberattaques) தடுக்கப்பட்டள்ளதாக, பிரான்சின் பாதுகாப்பமைச்சர் ஜோன்-ஈவ் லூ திரியோன் (Jean-Yves Le Drian), இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
 
 
கடந்த தேர்தலில் அமெரிக்க நிர்வாகமானது, ரஸ்யாவின் இணையவழித் தாக்குதலிற்கு உள்ளாகியது. இது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குறுக்கீடு ஆகும். இதே போல் பிரான்சின் நிர்வாகத்தை முடக்கும்  இணையவழித் தாக்குதல்கள், கடந்த வருடம் இரட்டிப்பாகி உள்ளது.
 
 
«நான் பாதுகாப்பமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, முக்கியமாகக் கடந்த மூன்று ஆண்டுகள், எங்களது இராணுவ உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை உபயோகித்தே, எம்மீதான தாக்கதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை முறியடிக்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் இப்படியான 24.000 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.  அச்றுத்துதல், உளவு பாரத்தல், இராணுவ இரகசியங்களைத் திருடுதல் போன்ற பல வடிவங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆளில்லா விமானங்களின் கண்காணிப்புகள் குழப்பப்பட்டன» என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 
இணையவழித்தாக்குதல்களை முறியிடிக்கும் மற்றும் நடாத்தும் படைப்பிரிவான CYBERCOM, இந்த ஜனவரி மாதத்திலிருந்து, இராணுவக் கூட்டுத் தலைமைத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரின் கீழ் 2600 இணைவழித்தாக்குதற் தடைப்பிரிவின் இலத்திரனியல் வீரர்கள் (combattants numériques) பணியாற்றுகின்றனர்.
 

மூலக்கதை