இருபது நாளில் 13 முதியவர்கள் பலி! - முதியோர் காப்பகத்தில் நடந்தது என்ன?!

PARIS TAMIL  PARIS TAMIL
இருபது நாளில் 13 முதியவர்கள் பலி!  முதியோர் காப்பகத்தில் நடந்தது என்ன?!

லியோன் மாவட்டத்தில் உள்ள முதியோர் தங்கும் விடுதி ஒன்றில் கடந்த இருபது நாட்களில் 13 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர்ஆ ஆரம்பித்துள்ளனர்.
 
லியோன் நகரில் உள்ள Korian Berthelot முதியோர்கள் காப்பகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் திகதியில் இருந்து, ஜனவரி 7ஆம் திகதி  நேற்றுவரையான 21 நாட்களில் 13 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வைரஸ் காய்ச்சல் கரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சகம், நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.  உயிரிழந்த முதியவர்களின் சராசரி வயது 91.5 ஆகும். மேலும், அதே காப்பகத்தைச் சேர்த மேலும் ஆறு முதியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர முன்னெச்சரிக்கையாக நேற்று சனிக்கிழமை 7 முதியவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தொடர் மரணங்கள் குறித்த உண்மையான நிலவரம் கண்டறியப்படவேண்டும் என தெரிவித்த சுகாதார அமைச்சகம், இதற்கான விசாரணைகளை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 10 நாட்களுக்குள் இது தொடர்பான முழுமையாத தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை