வீட்டு பொருட்களை ஜன்னலுக்கால் தூக்கி வீசிய நபர்! - காவல்துறையினர் விசாரணை!

PARIS TAMIL  PARIS TAMIL
வீட்டு பொருட்களை ஜன்னலுக்கால் தூக்கி வீசிய நபர்!  காவல்துறையினர் விசாரணை!

சம்பவம் Osny நகரத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் தளத்தில் உள்ள தனது வீட்டு பொருட்களை எல்லாம் ஒரு நபர் ஜன்னலுக்கால் வெளியே தூக்கி வீசியுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
 
Osny நகரின் rue Pasteur பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர், நேற்று சனிக்கிழமை மாலை தீயணைப்புபடை வீரர்களுக்கு அழைப்பு மேற்கொண்டு, என் வீடு தீப்பிடித்து எரியப்போகிறது. வந்து காப்பாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் இருந்த அனைத்து பொருட்களையும் ஜன்னலுக்கால் தூக்கி வெளியே வீசியுள்ளார். இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். கோப்பைகள், தண்ணீர் குடுவைகள், ஆடைகள் உட்பட இன்னும் பல பொருட்கள் மூன்றாம் தளத்தில் இருந்து குடியிருப்பின் தோட்டத்தில் வந்து வீழ்ந்ததை பலர் அச்சத்துடன் பார்த்துள்ளார்கள்.
 
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மூன்றாம் தளத்தில் இருந்து குறித்த நபர் குதித்துவிடுவார் என பயந்து, கீழே பாதுகாப்பு வலையை அமைத்துள்ளார்கள். ஆனால் அப்படி சம்பவம் நல்லவேளையாக இடம்பெறவில்லை. பின்னர், காவல்துறையினர் குறித்த நபரின் விட்டுக்குள் நுழைந்து தடுத்து நிறுத்தி விசாரணைகளை ஆரம்பித்தனர். 'வீட்டுக்குள் தீ பரவ இருந்தது' என குறித்த 25 வயது நபர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு மணிநேர விசாரணைகளின் பின்னர் மருத்துவ உதவிக்காக மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

மூலக்கதை