பரிஸ் - சார்லி எப்த்தோ இரண்டாம் வருட நினைவஞ்சலி!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  சார்லி எப்த்தோ இரண்டாம் வருட நினைவஞ்சலி!

சார்லி எப்த்தோ பத்திரிகை மீது பாங்கரவாதிகள் தாக்குதல் இடமெற்று இரண்டாவது வருட நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு பரிசில் இடம்பெற்றுள்ளது.
 
கேளிக்கை பத்திரிக்கையான சார்லி எப்த்தோ மீது இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கடந்த  ஜனவரி 2015 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியிருந்ததது வாசகர்கள் அறிந்ததே. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இரண்டாம் வருட நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு Place de la Republique இல் இடம்பெற்றது. இந்த அஞ்சலி கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் அஞ்சலி கூட்டத்தில் பலியானவர்களின் 17 பெயர்களும் வாசிக்கப்பட்டது. பின்னர் மலர் வளையங்களும், மலர் கொத்துக்களும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
இந்த இரங்கல் கூட்டத்துக்கான அழைப்பு, நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அஞ்சலி செலுத்தும் Place de la Republique இடத்தில் பிரெஞ்சு கொடியும், 'நான் இன்னும் சார்லியாகவே இருக்கிறேன்' (Je suis toujours Charlie) என எழுதப்பட்ட வாசகமும் வைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை