86 ஆண்டுகளுக்கு பின் புதிய சாதனை படைத்த வார்னர்!

PARIS TAMIL  PARIS TAMIL
86 ஆண்டுகளுக்கு பின் புதிய சாதனை படைத்த வார்னர்!

 அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது.

 
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மெட்ரென்சவ் களமிறங்கினார்கள்.
 
இந்நிலையில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர் 42 பந்தில் அரை சதம், 78 பந்தில் சதம் என மிரள வைத்தார். இதில் 17 பவுண்டரிகளும் அடங்கும்.
 
தனது 60வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 18வது சதமாகும். 95 பந்துகளை சந்தித்த டேவிட் வார்னர் 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
மதிய உணவு இடைவேளைக்கு முன்பே அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
 
இதன் மூலம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த 2வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார்.
 
இதற்கு முன்பு கிரிக்கெட் சகாப்தம் டான் பிராட்மேன் 1930ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்திருந்தார்.
 
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 365 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மூலக்கதை