பருத்தித்துறையில் கடல் கொந்தளிப்பு: 10 மீனவர்களை காணவில்லை

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
பருத்தித்துறையில் கடல் கொந்தளிப்பு: 10 மீனவர்களை காணவில்லை

யாழ்.பருத்தித்துறையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக வடமராட்சி கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 10 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளில் ஆறு மீனவர்களும், வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும், இன்பர்சிட்டி பகுதியில் ஒரு படகில் சென்ற இரு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக யாழ்.கடற்தொழில் நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடல் தொடர்ந்தும் கொந்தளிப்பாக காணப்படுவதால், காணாமல் போன மீனவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடா எனப்படும் சூறாவளி காங்கேசன்துறை கடற்பரப்பிற்கு அப்பால் நிலைகொண்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் அசாதாரண காலநிலை நிலவுகிறது. நாளை வரை பலத்த காற்றுடன் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதோடு கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அதனால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை