அண்ணனுக்கும் ஓகே!!.. தம்பிக்கும் ஓகே!!.. சொன்ன நடிகை

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
அண்ணனுக்கும் ஓகே!!.. தம்பிக்கும் ஓகே!!.. சொன்ன நடிகை

 

‘ரஜினி முருகன்’ படத்துக்குப் பின் தமிழில் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கின. அது ‘ரெமோ’ படம் வந்ததற்குப் பிறகு இன்னும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.

தற்போது ’பைரவா’ படத்தில் விஜய்யோடும், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவோடும் ஜோடி சேர்ந்திருக்கும் கீர்த்தி, சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கும் புதிய படத்தில் தான் கார்த்தி-கீர்த்தி ஜோடி சேர்கிறார்கள் என தகவல்கள் வருகின்றன.

கார்த்தி படத்தில் கீர்த்தி கமிட்டாகிவிட்டால், ஒரே நேரத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைக்கும். பலே..!

மூலக்கதை