அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்… ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்… ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை

அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசரக்கூட்டம் இன்று காலையில் நடைபெற்றது. அதில் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

இதில் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதே போல வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னையில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் சபாநாயகர், ஜெயலலிதா தவிர்த்து அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் யாரும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே மதியம் 3 மணிக்கு மேல் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் ஜெயலலிதா உடல்நிலை மிக, மிக மோசமாக இருப்பதாக கூறி தகவல் வெளியிட்டனர்.

இந்த நிலையில், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏக்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 6 மணிக்கு கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 7 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏக்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 6 மணிக்கு கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 7 கூட்டம் அவைத்தலைவர் மதுசூதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. முன்னதாக 5.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் அதிமுக தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதனையடுத்து அது தவறான தகவல் என்று சில நிமிடங்களில் செய்தி வெளியாகவே, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை