ஜெயலலிதா விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன்: ராகுல் காந்தி

தினத்தந்தி  தினத்தந்தி
ஜெயலலிதா விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன்: ராகுல் காந்தி

புதுடெல்லி,
தமிழக முதல் அமைச்சர் விரைவில் உடல் நலம் தேற விரும்புவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறுகையில்,”  நான் இந்த செய்தியை கேட்டேன். வெகு விரைவில் ஜெயலலிதா உடல் நலம் தேறுவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார். 
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவரது உடல் நிலை மிக மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. முதல் அமைச்சர் ஜெயலலிதா  தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மூலக்கதை