தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது: ஜேபி நட்டா

தினத்தந்தி  தினத்தந்தி
தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது: ஜேபி நட்டா

சென்னை,
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை  ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்டது.
முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும். ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  
ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.பி இல கணேசன் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சற்று முன் வருகை தந்தனர். இந்த நிலையில், தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ஜேபி நட்டா இந்த தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “ முதல் அமைசசருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவி தேவைப்படுவதாக உதவி கேட்டனர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளோம். ஜெயலலிதா உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதா உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையிடமும் தமிழக அரசிடமும்விசாரித்து வருகிறோம்”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை