சுப்புலட்சுமி நடிக்கவில்லை!

தினத்தந்தி  தினத்தந்தி
சுப்புலட்சுமி நடிக்கவில்லை!

கமல்ஹாசனை பிரிந்த கவுதமி தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சுப்புலட்சுமி ஒரு படத்தில் நடிக்கப் போவதாக சில தகவல்கள் பரவின. அது தவறான தகவல் என்று கவுதமி தனது ட்விட்டரில் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

“என் மகள் சுப்புலட்சுமி நடிக்கப் போவதாக எண்ணி பலர் அவளுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. சுப்புலட்சுமி இப்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை” என்று அவர் கூறியிருக்கிறார்!

மூலக்கதை