பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பார்த்து அழகாய் இல்லை என்று சொன்னதால் தற்கொலை செய்துகொண்ட மாணவி

தினகரன்  தினகரன்
பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பார்த்து அழகாய் இல்லை என்று சொன்னதால் தற்கொலை செய்துகொண்ட மாணவி

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிராண்டி வேலா என்ற 18 வயது பள்ளி மாணவி தனது பெற்றோர் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் பக்கத்தில் அவரது புகைப்படத்தில் நீ அழகாக இல்லை எனவும் குண்டாக இருக்கிறாய் எனவும் கமெண்ட் பதிவு செய்யப்பட்டிருந்ததை பார்த்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். பிராண்டி வேலா தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை போஸ்ட் செய்திருந்தார். அதனை பார்த்த பலர் நீ மிகவும் குண்டாக இருப்பதாகவும் அழகாக இல்லை என்றும் கமெண்ட் போட்டுள்ளனர். இதனை பார்த்த அவர் மனமுடைந்து போனார். பின்னர் அவரது தங்கையிடம்  \'உன்னை மிகவும் நேசிக்கிறேன், தயவு செய்து இதனை நினைவில் வைத்துக்கொள் என்றும் எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு என்றும் குறுந்செய்தியை  அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ந்து போன தங்கை, அதனை தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளார். சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக பிராண்டிவேலாவின் படுக்கையறைக்கு ஓடினர். அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த பிராண்டிவேலா தான் குண்டாக அசிங்கமாக இருக்கிறேன் கூறியுள்ளார். மேலும் இதனால் சாகப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நீ அழகாகதான் இருக்கிறாய் என கூறி கெஞ்சியுள்ளனர். ஆனால் தனது முடிவில் இருந்து மாறாமல் பெற்றோரின் கண்முன்னே துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை