நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில்நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில்நிலையங்களில் தீவிர கண்காணிப்பு


சென்னை, -பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர சோதனக்கு பிறகே ரயில்நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கூடுதல் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே ரயில்நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணச்சீட்டு வைத்திருந்தால் மட்டுமே பயணிகள் ரயில்நிலையத்திற்குள் செல்ல முடிகிறது.

பயணிகளின் உடைமைகளும், ரயில்கள் மூலம் அனுப்பப்படும் சரக்குகளும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கபடுகிறது.

மாம்பலம், பெரம்பூர் ரயில்நிலையங்களில் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடக்டர் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் முதல்முறையாக பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள திருமயிலை ரயில்நிலைய நுழைவாயிலில் மெட்டல் டிடக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதிப்பில்லை: முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதால் தமிழகத்தில் பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள்,  புறநகர் மின்சார ரயில்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்குகின்றன.



.

மூலக்கதை