பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் இபிஜெனியா கல்லறையில் நல்லடக்கம்

தினகரன்  தினகரன்
பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் இபிஜெனியா கல்லறையில் நல்லடக்கம்

சான்டியாகோ: கியூபா நாட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு ஒன்பதுநாள் துக்கம் அனுசரிக்க அரசு உத்தரவிட்டது. அவரது உயிர் பிரிந்த சிலமணி நேரத்துக்குள் உடல் தகனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சாம்பல் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிவந்த பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அவரது விருப்பத்தின்படி இன்று சான்டியாகோ நகரில் உள்ள அரசு மரியாதையுடன்  சான்ட்டா இபிஜெனியா கல்லறையில் நல்லடக்கம் செய்ய இறுதி ஊர்வலம் நடந்தது. பின்னர் அந்நாட்டு ராணுவ தளபதியின் சீருடையில் இருந்த ரவுல் காஸ்ட்ரோ தனது சகோதரர் சாம்பலை ஒரு கலசத்தில் இட்டு கல்லறைக்குள் புதைத்தார்.

மூலக்கதை