முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க வெங்கையா நாயுடு சென்னை வருகை

தினகரன்  தினகரன்
முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க வெங்கையா நாயுடு சென்னை வருகை

புதுடெல்லி: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று மாலை சென்னை வருகிறார். பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் வெங்கையா நாயுடு சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பல்லோவில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை  ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை முதல்வருக்கு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்படும். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும். அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.  ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க மும்பையில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்றார். இந்த நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து ஆளுநர் வித்யாசகர் ராவ்விடம் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேட்டறிந்தார். இந்த சூழ்நிலையில்  வெங்கையா நாயுடு இன்று மாலை சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை