ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா...

தினத்தந்தி  தினத்தந்தி
ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா...

பாங்காக்,
ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
6 அணிகள் இடையிலான பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காங்கில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்ற நிலையில், சாம்பியன் யார் என்று நிர்ணையிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி மித்தாலி ராஜின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. மித்தாலி ராஜ்  65 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 
இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய மகளிர் 20 ஓவர் போட்டித்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி, ஆறாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. 

மூலக்கதை