விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தது: கொட்டும் மழையில் ரசிகர்கள் கண்ணீர்

தினகரன்  தினகரன்
விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தது: கொட்டும் மழையில் ரசிகர்கள் கண்ணீர்

சபோகோ: கொலம்பியா நாட்டின் மெட்லின் நகருக்கு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த பிரேசில் நாட்டின் முதல் தர கால்பந்து கிளப் அணியான சாபோகோயின்ஸ் வீரர்கள் உள்பட 71 பேர் உயிரிழந்தனர். சாபோகோயின்ஸ் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உள்பட 50 பேரின் உடல்கள், அந்த அணியின் ‘ஹோம் டவுனான’ சாபோகோ நகருக்கு வந்தடைந்தது. அங்குள்ள அரினோ கோண்டா மைதானத்தில், கொட்டும் மழையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், வீரர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில், கலந்து கொண்ட பெரும்பாலான ரசிகர்கள், சாபோகோயின்ஸ் அணியின் பச்சை மற்றும் வெள்ளை நிற ஜெர்சியை அணிந்திருந்தனர். ‘என்ன நடந்தது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை’ என அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்த சாபோகோயின்ஸ் அணியின் நட்சத்திர கோல் கீப்பர் மார்கோஸ் டேனிலாவின் தாய் இல்எய்டி பதிலா கூறுகையில், எனது மகன் சவப்பெட்டிக்குள் வருவான் என எதிர்பார்க்கவில்லை. இது அதிர்ச்சியை அளித்துள்ளது என்றார்.

மூலக்கதை