ஐஎஸ்எல் கால்பந்து கேரளா-நார்த் ஈஸ்ட் இன்று மோதல்: அரையிறுதிக்கு முன்னேற போவது யார்?

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எல் கால்பந்து கேரளாநார்த் ஈஸ்ட் இன்று மோதல்: அரையிறுதிக்கு முன்னேற போவது யார்?

கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 3வது சீசன், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதிக்கு மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகள் தகுதி பெற்று விட்டன. புனே, சென்னை, கோவா அணிகள் வெளியேறி விட்டன. 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற போவது யார்? என்பதை தீர்மானிக்கும், கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொச்சியில் நடைபெறுகிறது. தற்போதைய நிலையில், கேரளா 19 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 18 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. இதனால் இந்த போட்டியில் டிரா செய்தாலே கேரளா அரையிறுதிக்கு முன்னேறி விடும். அதே சமயம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியோ, அரையிறுதிக்கு முன்னேற கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. ஐஎஸ்எல் 3வது சீசனின் கடைசி லீக் போட்டி இதுவாகும். சொந்த மண்ணில் விளையாடுவது கேரள அணிக்கு பெரும்பலம். அந்த அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், உற்சாகத்துடன் களமிறங்கும்.

மூலக்கதை