maternity freebies in gujarat hospital

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பிரசவ செலவு முற்றிலும் இலவசம் என்று பெண் குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்தி வருகிறார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர்.

 

குஜராத் மாநிலம் மேக்சனா கிராமத்தைச் சேர்ந்தவர் அல்பேஷ். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரஜாபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரஜாபதி சமீபத்தில் பிரசவத்துக்காக டாக்டர் தேஜாஸ் என்பவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு, பிரஜாபதிக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிரசவத்துக்காக அல்பேஷ் மருத்துவமனையில் கட்டி இருந்த 30 ஆயிரம் ரூபாயை அந்த மருத்துவமனையின் டாக்டர் திருப்பிக் கொடுத்துள்ளார்.

 

இது குறித்து டாக்டர் தேஜாஸ் கூறும்போது, ''இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 1,000 ஆணுக்கு 886 பெண் என்ற விகிதத்தில் உள்ளது. எனவே, பெண் குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்தவே சிகிச்சை செலவை திருப்பி அளித்து விட்டேன். அந்த தொகையை அந்த குழந்தையின் கல்வி செலவுக்கு பயன்படுத்துமாறு கூறியுள்ளேன்" என்று கூறினார்.

மூலக்கதை