lpg distributors threaten to go on indefinite strike

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

இன்று நடைபெற இருந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  மானியம் மற்றும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்களுக்கு ஒரே விலை நிர்ணயிக்க வேண்டும், புதிய விநியோகஸ்தர்களின் நியமன அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுடன், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், விநியோகஸ்தர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, இன்று முதல் தொடங்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கோரிக்கைகளை, மார்ச் 31ஆம் தேதிக்குள் அரசு நிறைவேற்றறித்தர வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெற இருந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 


மானியம் மற்றும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்களுக்கு ஒரே விலை நிர்ணயிக்க வேண்டும், புதிய விநியோகஸ்தர்களின் நியமன அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுடன், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், விநியோகஸ்தர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, இன்று முதல் தொடங்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கோரிக்கைகளை, மார்ச் 31ஆம் தேதிக்குள் அரசு நிறைவேற்றறித்தர வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மூலக்கதை