santhanam to join again with vijay

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
santhanam to join again with vijay

புலி படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இந்த நட்சத்திர கூட்டணியில் தற்போது புதிதாக சந்தானம் இணைந்திருக்கிறார். சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்கள் ஓரளவுக்கு ஹிட்டானது. இதையடுத்து இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன். காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய சந்தானம், தற்போது விஜய் நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

சந்தானம் ஏற்கனவே விஜய்யுடன் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை