ஆண்டுக்கு ‘ஒரு டாலர்’ மட்டுமே சம்பளம் : அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆண்டுக்கு ‘ஒரு டாலர்’ மட்டுமே சம்பளம் : அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாக புதிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் பெற்றி பெற்றார்.

ஜனநாயக கட்சி வேட்பளார் ஹிலாரியை தோற்கடித்து வெற்றி பெற்ற டிரம்பை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் வெற்றி பெற்றது முதலே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.



நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ‘நான் அதிபர் பதவிக்காக ஒரு ஆண்டு சம்பளமாக அளிக்கப்படும் 4 லட்சம் டாலரை எடுத்துக் கொள்ள மாட்டேன். மாறாக ஒரு டாலர்  மட்டுமே சம்பளம் பெற்றுக் கொள்வேன்.

சட்டரீதியாக இலவசமாக வேலை செய்ய இயலாது. எனவே சட்டப்படி நான் சம்பளம் வாங்கித்தான் வேலை செய்ய வேண்டும்.

எனவே சட்டத்திற்கு உட்பட்டு ஒரு டாலர் மட்டுமாவது பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஒரு டாலர் பெற்றுக் கொள்வேன்.

அதே போல விடுப்பு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் மக்களுக்காக அரசியல் பணி ஆற்றுவேன்.

விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்று உல்லாச பயணம் எதுவும் மேற்கொள்ள மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு அமெரிக்காவில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு முதன் முதலாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை