இத்தாலியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இத்தாலியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்


வாடிகன், - இத்தாலியில் நேற்றிரவு அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.

இதனால் மக்கள் பீதிக்குள்ளாகினர். இத்தாலியின் விஸ்ஸோ பகுதியில் நேற்று இரவு 7. 30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5. 6 புள்ளிகளாக இருந்தது. 6 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர்.



 இதன்பின்னர், இரவு 9. 18 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6. 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இருந்ததால் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.

இதனால் பலர் காயம் அடந்தனர். இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளுக்குள் செல்லாமல் மக்கள் திறந்தவெளியிலேயே இரவு முழுவதும் தங்கிருந்தனர்.

விஸ்ஸோ நகரில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ெதரிய வந்துள்ளது. மின்சாரம் தடைபட்டதால் மக்கள்  சிரமப்பட்டனர்.

சாலைகளில் வெடிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.     



.

மூலக்கதை