ஜெயலலிதா உடல் நிலை: சொல்ல வேண்டாம் என உத்தரவிட்ட சசிகலா?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஜெயலலிதா உடல் நிலை: சொல்ல வேண்டாம் என உத்தரவிட்ட சசிகலா?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த அறிக்கைகள் கடந்த 10 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியாகவில்லை. இது குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியிட நீதிமன்றத்தை நாடினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகளை படித்து பார்த்து தெரிந்து கொள்ள உத்தரவிட்டது.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சீரான இடைவெளியில் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது. இதனையடுத்து பல்வேறு வதந்திகளும், யூகங்களும் முதல்வரின் உடல் நிலைகுறித்து பரவியது.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளே வதந்திகள் பரவ காரணமாகி போனதால், இனிமேல் முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிட வேண்டாம் என சசிகலா தரப்பு உத்தரவிட்டதாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், மக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான பரபரப்பு குறைந்திருப்பதால் அறிக்கைகளை தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல் அடங்கிய மருத்துவமனையின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என உத்தரவிட சசிகலாவுக்கு யார் அதிகாரமளித்தது, அரசு நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் எப்படி மாநில முதல்வரின் உடல் நிலை தொடர்பான விஷயங்களில் உத்தரவிட முடியும், அவருக்கு யார் அந்த உரிமைய வழங்கியது என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மூலக்கதை