வங்கி கணக்கு இல்லாததால் எனக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது : ராம்தேவ் தகவல்

தினகரன்  தினகரன்
வங்கி கணக்கு இல்லாததால் எனக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது : ராம்தேவ் தகவல்

இந்தூர்: ‘‘வங்கி கணக்கு இல்லாததால் எனக்கு விசா அளிக்க அமெரிக்கா முன்பு மறுத்தது’’ என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் இந்தூரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் ரூ,4,500 கோடி மதிப்புள்ள பதஞ்சலி குழுமத்துக்கு தலைமை தாங்கும் ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் அமெரிக்கா செல்ல முதல் முறையாக விசாவுக்கு விண்ணப்பித்தபோது, எனக்கு விசா அளிக்க மறுத்து விட்டனர். இதற்கான காரணத்தை கேட்டேன். எனது பெயரில் வங்கி கணக்கு இல்லை. திருமணம் செய்யவில்லை. ஏதாவது பிரச்னைகள் இருக்கலாம் என்றனர். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ...

மூலக்கதை