யு-17 உலக கோப்பை கால்பந்து வட கொரியா சாம்பியன்

தினகரன்  தினகரன்
யு17 உலக கோப்பை கால்பந்து வட கொரியா சாம்பியன்

அம்மான்: பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் வட கொரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் வட கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் விழாததால், பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது.அபாரமாக செயல்பட்ட வட கொரிய வீராங்கனைகள் தங்களுக்கு வழங்கப்பட்ட 5 வாய்ப்பிலும் கோல் அடித்து அசத்தினர். ஜப்பான் அணியின் கடைசி வாய்ப்பை வட ...

மூலக்கதை