யாழ் பல்கலைகழக மாணவன் சுட்டுக்கொலை! தாயிடம் கெஞ்சும் பொலிஸ்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழ் பல்கலைகழக மாணவன் சுட்டுக்கொலை! தாயிடம் கெஞ்சும் பொலிஸ்

 யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸார் சுட்டுக் கொலை செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
முன்னர் விபத்து என்று கூறப்பட்ட போதும் பின்னர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குறித்த மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் ஒருவரின் உறவினர்களிடம் பொலிஸார் மன்னிப்பு கோரியதாக தெரிய வந்துள்ளது. 
 
கிளிநொச்சியை சேர்ந்த யாழ் பல்கலைகழக அரசியல்துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜனின் தாயாரான நடராசா சறோஜினி தெரிவிக்கையில், 
 
யாழ்ப்பாணம்  வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.  அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம். பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.
 
இந்த கொலையை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்து விட்டது.  குறித்த பொலிஸ்காரர்கள் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.
 
சம்மந்தப்பட்ட  பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகிறார்கள். அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்து கொள்ளுங்கள்.
 
மரண சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் பொலிஸாரினால் செய்து கொடுக்கப்படும். இதனால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம். 
 
கிளிநொச்சியில் உள்ள எங்கள் வீட்டுக்கு பொலிஸார் உதவி செய்ய வந்த போது, நாங்கள் அதனை ஏற்க வில்லை. அந்த ஊர் மக்கள் பொலிஸார் வருவதை அனுமதிக்கவில்லை. 
 
கொழும்பிலிருந்து பொலிஸ் பெரியவர் கதைப்பதாக ஒருவர் சொன்னார். அவர் எனது பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார். இந்த அனர்த்தம்  தவறுதலாக நடந்து விட்டது மன்னித்து கொள்ளும்படி கேட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
மிருகத்தனமாக பிள்ளைகளை சுட்டு கொலை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் நியாயமான என அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். 
 

மூலக்கதை