ஸ்ருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
ஸ்ருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை

கடந்த ஆண்டு மலையாள உலகில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் தமிழகத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் திரையில் ரிலீஸ் செய்யப்பட்டது.

நாயகனாக நாக சைதன்யாவும், நாயகியாக சுருதிஹாசனும் நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் சந்துமொன்டேட்டி இயக்கினார்.

இப் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் சமந்தா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்ததாகவும் சுருதியால் அந்த வாய்ப்பை அவர் இழந்ததாகவும் தெலுங்கு படவுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சந்து மொன்டேட்டி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

எனக்கு மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஸ்ருதிஹாசன் அணுகினோம். அவரும் ஆர்வமாக ஒத்துகொண்டார்.

அதன் பிறகு சிந்து கதாபாத்திரத்துக்கு சமந்தா வை யோசித்தது உண்மை தான், ஆனால் ஏற்கனவே பிரபலமான நடிகை ஸ்ருதி இருப்பதால் ஒத்துவராது என்று நினைத்தோம்.

மலையாளத்தில் நடித்த மடோனா தான் சரியாக இருப்பார் என்று தோன்றியது. எனவே தெலுங்கிலும் அவரையே அந்த வேடத்தில் நடிக்க வைத்தோம் என்றார்.

மூலக்கதை