மீண்டும் வினீத் சீனிவாசன் - அஜு வர்கீஸ் கூட்டணி..!

தினமலர்  தினமலர்
மீண்டும் வினீத் சீனிவாசன்  அஜு வர்கீஸ் கூட்டணி..!

எம்.ராஜேஷ்-சந்தானம் இவரைப்போல என வைத்துக்கொண்டாலும் சரி, இல்லை சிம்பு-சந்தானம் கூட்டணி என்கிற ரேஞ்சில் நினைத்துக்கொண்டாலும் சரி மலையாளத்தில் வினீத் சீனிவாசன்-காமெடி நடிகர் அஜு வர்கீஸ் கூட்டணி ஒரு படத்தில் இணைந்தது என்றால் அது ரசிகர்களுக்கு மரண மாஸ் தான். ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து கைதட்டலை அள்ளுவார்கள். 'ஒரு வடக்கன் செல்பி' படம் பார்த்த நம்மவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக இரட்டைக்குதிரையில் சவாரி செய்யும் வினீத் சீனிவாசனின் பெரும்பாலான படங்களில் அஜு வர்கீசுக்கும் ஓர் இடம் கட்டாயம் உண்டு.

தான் இயக்கிய 'மலர்வடி ஆர்ட்ஸ் கிளப்' படம் மூலம் அஜு வர்கீஸை காமெடியனாக அறிமுகப்படுத்திய வினீத் சீனிவாசன், அடுத்தடுத்து தான் இயக்கிய 'தட்டத்தின் மறயத்து', 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படங்களில் அஜு வர்கீசுக்கு முக்கியத்துவமான கேரக்டர் கொடுத்து நடிக வைத்தார். அதுமட்டுமல்ல, தான் நடித்த, 'ஓம் சாந்தி ஓசானா', 'ஓர்மையுண்டோ இ முகம்', 'ஒரு வடக்கன் செல்பி', 'குஞ்சிராமாயணம்' என தனது படங்களில் அஜு வர்கீசையும் கூட்டாளியாக சேர்த்துக்கொண்டார். இந்தவிதமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த கூட்டணி அடுத்ததாக 'அபி' என்கிற படத்தில் நண்பர்களாக நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் முரளி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

மூலக்கதை