3வது முறையாக இரசாயன தாக்குதல் நடத்திய சிரிய ராணுவம்-ஐ.நா குற்றசாட்டு

தினத்தந்தி  தினத்தந்தி
3வது முறையாக இரசாயன தாக்குதல் நடத்திய சிரிய ராணுவம்ஐ.நா குற்றசாட்டு

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் அரசுக்கு எதிரான புரட்சிப்படைப் போராளிகள் தங்கியுள்ள இடங்களின்மீது  நடைபெற்ற விமான தாக்குதலில் குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் வகையில் அலெப்போவில் 48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, வரும் 20-ம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணிவரை 8 மணிநேர தற்காலிக போர்நிறுத்தம் செய்ய சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷியாவுக்கான ஐ.நா. தூதர் விட்டலே சர்கின், இருதரப்பினருக்கும் இடையில் ஒரு சமாதான ஏற்பாடு எட்டப்படுவதற்கு 8 மணிநேர போர் நிறுத்தம் போதுமானது அல்ல; அங்கு 48 முதல் 72 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்கான முதல் முன்முயற்சிதான் இந்த 8 மணிநேர போர்நிறுத்தம் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஐநா பாதுககாபு குழு சிரியா அரசு படைகள் இட்லிப் மாகாணத்தில் மக்களுக்கு எதிராக 3 வது முறையாக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளது.

ஐநாவுக்காக இந்த  அறிக்கையை   கூட்டு குழு  தயாரித்து உள்ளது.அறிக்கையில் இட்லிப் மாகாணத்தில் பின்னிஷ் பகுதியில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதமும். ஹமா மாகாணத்தில் க்ப்ர் ஷிடா பகுதியில் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் 2 இரசாயன  தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை