கூடுதல் நிதி சேவை­களில் அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதி

தினமலர்  தினமலர்
கூடுதல் நிதி சேவை­களில் அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதி

மும்பை;ரிசர்வ் வங்கி, மேலும் பல நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்கி­யுள்­ளது. இதனால், நிதிச் சேவைகள் துறையில், அன்னிய நேரடி முத­லீ­டுகள் மேலும் அதி­கரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­படு­கி­றது.
வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள், தற்­போது, மத்­திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகி­ய­வற்றின் அனு­ம­தி­யின்றி, 18 வகை­யான நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீ­டு­களை திரட்டிக் கொள்­ளலாம். அவற்றில், நிதி ஆலோ­சனை, பங்குத் தரகு, வணிக வங்கி நடை­மு­றைகள், நிதி நிர்­வாகம் உள்­ளிட்ட சேவைகள் அடங்கும்.இவற்­றுடன், தற்­போது மேலும் பல நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மத்­திய அர­சுடன் மேற்­கொண்ட ஆலோ­ச­னையை அடுத்து, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின் கீழ், மேலும் பல நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்­பட்டு உள்­ளது. இச்­சே­வைகள், ரிசர்வ் வங்கி, ‘செபி, இரிடா, பி.எப்.ஆர்.டி., – என்.சி.பி., உள்­ளிட்ட நிதித் துறை அமைப்புகளின் கட்­டுப்­பாட்டின் கீழ் உள்­ள­வை­யாகும். கட்­டுப்­பாட்டு அமைப்­பு­களின் விதி­மு­றை­க­ளின்­படி, அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிதிச் சேவை­களில், அன்­னிய நேரடி முத­லீட்டை திரட்டிக் கொள்­ளலாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்ளது.

மூலக்கதை