பொறி­யியல் சாத­னங்கள் துறைக்கு ஒருங்­கி­ணைந்த கொள்கை

தினமலர்  தினமலர்
பொறி­யியல் சாத­னங்கள் துறைக்கு ஒருங்­கி­ணைந்த கொள்கை

புது­டில்லி:மத்­திய கன­ரக தொழில்கள் துறையின் கூடுதல் செயலர் அன்ஷூ பிரகாஷ் கூறி­ய­தா­வது:மத்­திய அரசு, ஒருங்­கி­ணைந்த பொறி­யியல் சாத­னங்கள் கொள்­கையை விரைவில் அறி­விக்க உள்­ளது. இது, அறி­வுசார் சொத்­து­ரிமை, இணைய பாது­காப்பு, தற்­போது தொழில்­களில் அதி­க­ரித்து வரும் தானி­யங்கி நடை­முறை உட்­பட, அனைத்து நவீன பிரி­வு­களின் வளர்ச்­சியை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்கும்.
இக்­கொள்கை, தயா­ரிப்பு மற்றும் உற்­பத்தி துறையின் மேம்­பாட்­டுக்கு உதவும்.இந்­தாண்டு பிப்­ர­வ­ரியில், தேசிய பொறி­யியல் சாதனங்கள் கொள்கை அறி­விக்­கப்­பட்­டது. பொறி­யியல் சாத­னங்கள் சந்தை மதிப்பை, தற்­போ­தைய, 2.30 லட்சம் கோடியில் இருந்து, 2025ல், 7.50 லட்சம் கோடி ரூபா­யாக உயர்த்தும் நோக்கில், இக்­கொள்கை உரு­வாக்­கப்­பட்­டது. பொறி­யியல் சாத­னங்கள் துறையில், நேரடி மற்றும் மறை­முக வேலை­வாய்ப்­பு­களை, தற்­போ­தைய, 84 லட்சத்தில் இருந்து, மூன்று கோடி­யாக உயர்த்த, இக்­கொள்கை துணை புரியும்.இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை