பானா­சோனிக் நிறு­வனம்சந்தை பங்­க­ளிப்பு அதி­க­ரிப்பு

தினமலர்  தினமலர்
பானா­சோனிக் நிறு­வனம்சந்தை பங்­க­ளிப்பு அதி­க­ரிப்பு

புது­டில்லி;ஜப்பான் நாட்டை சேர்ந்த, பானா­சோனிக், வீட்டு உப­யோக மின் சாத­னங்கள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், வீடு­களில் பயன்­ப­டுத்தும் ஏர்­பி­யூ­ரி­பையர் சாத­னங்­களை, அதிகளவில் விற்­பனை செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் பொது மேலாளர் சையத் மூனிஸ் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், 50 ஆண்­டு­க­ளுக்கு மேலாக, ஏர்­பி­யூ­ரி­பை­யரை தர­மான முறையில் உற்­பத்தி செய்து வழங்­கு­கி­றது. நடப்பு நிதி­யாண்டில், 20 ஆயிரம் ஏர்­பியூ­ரி­பையர் விற்க திட்­ட­மிட்டு உள்­ளது. இதன் மதிப்பு, 20 கோடி ரூபாய். ஆண்­டு­தோறும், ஏர்­பி­யூ­ரி­பையர் விற்­பனை, 30 சத­வீதம் அதி­க­ரித்து வருகி­றது.
பானா­சோனிக், அடுத்த நான்கு ஆண்­டு­களில், ஏர்­பி­யூ­ரி­பையர் மூலம், 1,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்­துள்­ளது. இதன் வாயி­லாக, அந்த சாத­னங்­களின் சந்­தையில் எங்கள் நிறு­வனம், 20 சத­வீத பங்களிப்பை கைப்­பற்றும். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை