பொது காப்­பீட்டு பிரீ­மியம் ரூ.1.20 லட்சம் கோடி வருவாய்

தினமலர்  தினமலர்
பொது காப்­பீட்டு பிரீ­மியம் ரூ.1.20 லட்சம் கோடி வருவாய்

மும்பை:பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரீ­மிய வருவாய், 1.20 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என, மதிப்பிடப்­பட்டு உள்­ளது. பொது காப்­பீட்டு துறை வணி­கத்தில் ஈடு­படும் நிறுவனங்­களின் பிரீ­மிய வருவாய், கடந்த நிதி­யாண்டில், 96 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் என்­ற­ளவில் இருந்­தது. இந்­நி­லையில், நடப்பு நிதி­யாண்டில், செப்., மாதம் வரை­யி­லான காலத்தில், பொது காப்­பீட்டு துறை நிறு­வ­னங்­களின் மொத்த பிரீ­மிய வருவாய், 60 ஆயி­ரத்து, 408 கோடி ரூபா­யாக அதிக­ரித்து உள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 46 ஆயி­ரத்து, 966 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது.
இதை­ய­டுத்து, நடப்பு நிதி­யாண்டில், பிரீ­மிய வசூல், 1.20 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என, மதிப்பிடப்­பட்டு உள்­ளது. இது குறித்து, காப்­பீட்டு நிறு­வன அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘மத்­திய அரசு, பிர­தம மந்­திரி காப்­பீட்டு திட்­டத்தை, கடந்த ஜூலையில் அறி­முகம் செய்­தது. இதன் மூலம், பொது காப்­பீட்டு துறை வளர்ச்சி கண்டு வரு­கி­றது’ என்றார்.

மூலக்கதை