யாராலும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா ஒரு பார்வை

CINEULAGAM  CINEULAGAM
யாராலும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா ஒரு பார்வை

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை தன் நடனத்தால் கட்டிப்போட்ட நாயகி சில்க் ஸ்மிதா.

கவர்ச்சி, நடனம் என இவரை போல் ரசிகர்களை கவர்ந்தவர்கள் யாரும் இல்லை. அப்படிபட்ட சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தது யாராலும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம். சரி, சில்க்கின் நினைவு நாளில் அவரைப் பற்றி சில விஷயங்களை பார்ப்போம்.

ஆந்திர மாநிலத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி, நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார் சில்க் ஸ்மிதா என்கிற விஜயலட்சுமி. நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார்.

கவர்ச்சி நடிகைகள் என்றால் பாடல் மட்டும் ஆடுவார்கள் என்பதை மாற்றிக் காட்டியவர் சில்க்.

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் குணச்சித்திர நடிகையாகவும், அன்று பெய்த மழை என்ற படத்தில் பன்முகத் திறமை கொண்ட நடிகையாகவும் இருந்து வந்தார்.

ஒரு காலக்கட்டத்தில் சில்க் நடிக்காமல் ஒரு படமும் வெளியாகவில்லை என்று கூறலாம். 1980களில் முன்னணியில் இருந்த நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படத்தில் இவர் இருக்கிறாரா என்று தான் முதலில் கேட்பார்களாம்.

இப்படி புகழின் உச்சியில் இருந்த சில்க் குறுகிய காலத்துக்குள் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த இவர் காதல் தோல்வியால் செப்டம்பர் மாதம் 23ம் தேதி தன்னுடைய வாழ்வை தூக்குப் போட்டு முடித்துக் கொண்டார்.

இவருடைய இந்த திடீர் தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடனம், வசீகர கண்கள், குணச்சித்திர வேடம் என ரசிகர்களை கட்டிப்போட்ட இவரின் பிறந்த நாளிலும், இறந்த நாளிலும் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அவரை நினைவு கொண்டு தான் இருக்கிறார்கள்.

பல புகழுக்கு சொந்தக்காரியான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தி டர்டி பிக்சர் என்ற படம் ஹிந்தியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை