உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கீடு; ஜி.கே.மணி தகவல்

தினத்தந்தி  தினத்தந்தி
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கீடு; ஜி.கே.மணி தகவல்

சென்னை,

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் ‘மாம்பழம்’ சின்னம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. சார்பில் ஒன்றியக் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், பேரூராட்சி வார்டு உறுப்பினர், 3–ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்குரிய படிவம் ‘ஏ’ மற்றும் படிவம் ‘பி’, இரண்டும் வேட்பாளர்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும். பா.ம.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது படிவம் ‘சி’ பூர்த்தி செய்து கட்டாயம் வேட்புமனுவுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

சிற்றூராட்சி தலைவர் மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டு ஒதுக்கீடு செய்யப்படும் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை