உள்ளாட்சி தேர்தல் : தமிழ் மாநில காங்கிரஸ் முதல் பட்டியல் வெளியீடு

தினத்தந்தி  தினத்தந்தி
உள்ளாட்சி தேர்தல் : தமிழ் மாநில காங்கிரஸ் முதல் பட்டியல் வெளியீடு

சென்னை,

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடுகிறது. த.மா.கா.  வேட்பாளர்கள் முதல் பட்டியலை ஜி.கே.வாசன் இன்று சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார்.

சென்னை மாநகராட்சி யில் 64 வார்டுகள், மதுரையில் 10 வார்டுகள், கோவையில் 8 வார்டுகள், திருச்சியில் 6 வார்டுகள், ஈரோட்டில் 20 வார்டுகள், சேலத்தில் 4 வார்டுகள், திருப்பூரில் 40 வார்டுகள், தூத்துக்குடியில் 5 வார்டுகள், தஞ்சையில் 7 வார்டுகள், திண்டுக்கல்லில் 5 வார்டுகள் என 10 மாநகராட்சிகளில் 169 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
சென்னை மாநகராட் சியில் போட்டியிடும் வேட் பாளர் மற்றும் வார்டு விவரம்:-

முத்துக்கிருஷ்ணன் (2-வது வார்டு), பெரியசாமி (4-வது வார்டு), வி.பி.ரவி (6-வது வார்டு), எம்.டி.ராஜா (7-வது வார்டு), லீலா என்ற ருக்குமணி (13-வது வார்டு), வேலாயுதம் (20-வது வார்டு), ஜெயகாந்தன் (21-வது வார்டு), சி.எம்.பாலு (29-வது வார்டு), விஜயகுமார் (19-வது வார்டு), ரோசிலின் மேரி (22-வது வார்டு), ஷர்மிளாவிஜயன் (23-வது வார்டு), எட்டியப்பன் (28-வது வார்டு), காயத்ரி (30-வது வார்டு), ஜெயா விஸ்வநாதன் (35-வது வார்டு), சாகுல் அமீது (36-வது வார்டு), ரஜினி செல்வம் (37-வது வார்டு), ஆரவள்ளி (39-வது வார்டு), புஷ்பம்மாள் (44-வது வார்டு), யோகராஜ் (45-வது வார்டு), கிருபாகரன் (47-வது வார்டு), மைதிலி ஞானசேகரன் (49-வது வார்டு), கல்பனா (50-வது வார்டு), ஆனந்தராஜ் (53-வது வார்டு), திருமலை (54-வது வார்டு), லட்சுமி பிரபா (58-வது வார்டு), சாந்தினி தேவி (60-வது வார்டு), பிரமீலா (62-வது வார்டு), சீனிவாசன் (63-வது வார்டு), இந்திரேஷ் (64-வது வார்டு), சத்வின் பானு (67-வது வார்டு), கல்யாணி (70-வது வார்டு), கலாவதி (72-வது வார்டு), பரமேஸ்வரி (77-வது வார்டு), தீனதயாளன் (78-வது வார்டு), ராஜகோபால் (82-வது வார்டு), நாகராஜ் (84-வது வார்டு), ரெங்கநாயகி (95-வது வார்டு), ஆனந்த் (97-வது வார்டு), விஷ்ணுபிரியா (99-வது வார்டு), கணேசன் (105-வது வார்டு), ராம்குமார் (108-வது வார்டு), வெங்கட் (110-வது வார்டு), துரை (112-வது வார்டு), தியாகராஜன் (114-வது வார்டு), செல்வம் (115-வது வார்டு), ராணிகிருஷ்ணன் (124-வது வார்டு), பானு லாரன்ஸ் (125-வது வார்டு), ராஜா (127-வது வார்டு), ஜெயா (128-வது வார்டு), ஜி.கல்பனா (129-வது வார்டு), பாபு (137-வது வார்டு), ராமச்சந்திரன் (145-வது வார்டு), ரேவதி (151-வது வார்டு), வசந்தா (153-வது வார்டு), கனகவள்ளி (173-வது வார்டு), மணிக்கண்ணன் (178-வது வார்டு), லலிதாம்பிகை மணவாளன் (180-வது வார்டு), சந்தியா வீரமுத்து (183-வது வார்டு), வரதராஜன் (184-வது வார்டு), ரவி (186-வது வார்டு), அங்கமுத்து (190-வது வார்டு), செல்வராசு (192-வது வார்டு), பிரபு (197-வது வார்டு), சித்திரா யாதவன் (200-வது வார்டு).

நிகழ்ச்சியில் நிருபர்களி டம் ஜி.கே.வாசன் கூறிய தாவது:-

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து செயல்பட பிரதமர் உடனடி யாக கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண் டும். மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை காலம் தாழ்த்தாமல் அமைத்திட வேண்டும்.

தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே ஆளும் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையம் உள் ளாட்சி தேர்தலை நடுநிலை யோடு நடத்தும் என்று நம்புகிறேன் என்றார்.

இதில் மாவட்ட தலைவர் கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூ சாக்கோ, சைதை மனோகரன், அருண் குமார், அண்ணாநகர் ராம் குமார், தலைமை நிலைய செயலாளர் கள் டி.எம்.பிர பாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் டி.என்.அசோகன், சீனிவாசன், தி.நகர் கோதண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மூலக்கதை