துப்பாக்கியை காட்டி மோடிக்கு மிரட்டல் விடுத்த பாக்.சிறுமி !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துப்பாக்கியை காட்டி மோடிக்கு மிரட்டல் விடுத்த பாக்.சிறுமி !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியானார்கள். இதன் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதற்கான ஆதாரத்தை அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து வழங்கியது இந்தியா.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி கடுமையாக பேசினார். அதோபோல் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஏ.கே 47 ரக துப்பாக்கியை எவ்வாறு சுடுவது என தனது மகளுக்கு கற்றுகொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மோடியை எச்சரிக்குமாறு சொல்லிக் கொடுக்கும் காட்சியை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் சிறுமி கேமராவை நோக்கி பிரதமர் மோடிக்கு மழலை மொழியில் மிரட்டல் விடுத்துள்ளார். மகளுக்கு தந்தையே துப்பாக்கி பயிற்சி கொடுக்கும் காட்சி உலகம் முழுவதிலும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் கையில் பேனாவை கொடுங்கள், துப்பாக்கியை அல்ல என்றும் சிலர் காட்டமாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தந்தையே சிறுமிக்கு இவ்வாறு பயிற்சி அளிப்பது கண்டனத்துக்குரியது என பலரும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை