கனடாவில் ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்ச்சி: கனேடிய தமிழர் சமூகம் அழைப்பு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
கனடாவில் ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்ச்சி: கனேடிய தமிழர் சமூகம் அழைப்பு

அண்மையில் இலங்கையில் இடம்பெற்றது போன்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையிலான ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் ‘ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களாய் ஒன்றாயிணைந்து வரலாறு படைப்போம் வாரீர்’ என்று கனேடிய தமிழர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த எழிச்சி நிகழ்வில், போர்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்புக்கான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், ஈழத் தமிழர்களிடம் அபகரித்த பூர்வீக காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், ஐ.நா கண்காணிப்பில் வடக்கு கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணி கடந்த 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் முன்றல் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை