சிறிலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு போட்டி போடும் அமெரிக்க நிறுவனங்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு போட்டி போடும் அமெரிக்க நிறுவனங்கள்!

 சிறிலங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை பெற்றுக் கொள்ள, அமெரிக்க உலக முதலீட்டு மேலாளர் நிறுவனங்கள் இரண்டு விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 
லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் வலைத்தளம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய ப்லேக்ரொக் (BlackRock) மற்றும் டீபீஜீ கெப்பிட்டல் (TPG Capital) ஆகிய இரண்டு நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளன. 
 
இந்த தகவலை அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமரவிக்ரம கூறியுள்ளார்.
 
கடன் பணத்துடன் இந்த நிறுவனத்தை ஏற்றுக் கொள்வதற்கு எந்த தரப்பும் இணங்கவில்லை என்பதால் தற்போது வரையில் சிறிலங்கா விமான சேவையின் கடன் பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த நேரிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னர் சிறிலங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை ஏற்றுக் கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்குள் சீன நிறுவனம் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது வரை அந்த நிறுவனம் இணக்கவில்லை என தெரிவித்துள்ளது.

மூலக்கதை