இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பள்ளிகள் மூடப்பட்டது, மருத்துவமனைகள் காலி...

தினத்தந்தி  தினத்தந்தி
இந்தியாபாகிஸ்தான் எல்லையில் பள்ளிகள் மூடப்பட்டது, மருத்துவமனைகள் காலி...



புதுடெல்லி, 
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டது. மருத்துவமனைகளை காலி செய்யும் பணியும் தொடங்கி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பதட்டத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. எல்லையில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. மருத்துவமனைகளையும் காலி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எல்லை கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். 
 பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள மருத்துவமனையில் பணியாளர்கள் காலி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்திய கிராமங்களில் உள்ள பள்ளிகள் அடுத்த உத்தரவு வரும்வரையில் மூடப்படுகிறது என்று பஞ்சாப் மாநில கல்வித்துறை அதிகாரி கூறிஉள்ளார். 

மூலக்கதை